முக்கியச் செய்திகள் தமிழகம்

சிவகளை, கீழடி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக் கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

நிலம் கையகப்படுத்தும் முறைகள் எளிமையாக்கப்படும்.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.

தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்

மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு.

பாசன திட்டங்களுக்காக ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு.

மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு”

 

Advertisement:
SHARE

Related posts

“கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் பொன்முடி

Halley Karthik

பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை கொலை செய்த மகள்!

Jeba Arul Robinson

மறைமுகத் தேர்தல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

Halley Karthik