#SingerManoவின் மகன்கள் மீது சரமாரி தாக்குதல் – 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

பாடகர் மனோவின் மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மனோவின் மகன்கள் மீதே 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பின்னணி…

#SingerMano's Sons Assaulted - Over 10 Boys Assault Video Released |

பாடகர் மனோவின் மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மனோவின் மகன்கள் மீதே 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 வயது சிறுவனையும் மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாகவும், இதில் 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மனோவின் 2 மகன்களும் தலைமறைவாகினர்

வளசரவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து இசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்த நிலையில் இருவரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் தற்போது ஆந்திரா மாநிலம் விரைந்தனர். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட தாக்குதல் நடைபெற்ற அன்று மனோவின் மகன்களை அப்பகுதி இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.