கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா…

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகையால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததால் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதற்கிடையே அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகையால் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், தனியார் வீடுகள், மற்றும் அறைகள் நிரம்பி வழிந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.