பாடகரான தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

மக்களவை தேர்தலில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,  முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும்…

மக்களவை தேர்தலில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பாடல் ஒன்றை பாடியுள்ளார். 

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,  முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி,  அ.தி.மு.க. கூட்டணி,  பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  மேலும் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ‘வாக்கு யாருக்காயினும் வாக்களிக்க தவறாதீர்கள்’ என்னும் தலைப்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு குரலில் விழிப்புணர்வு பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.   ‘உன் உரிமை காத்திடும் வயதிது,  உன் கடமை செய்திடும் நேரமிது’  என்னும் எழுச்சிமிகு வரிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.