சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசார் நியமனம்…!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் விழா மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை அமைக்கப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

இதனை தொடர்ந்து தனி பிரிவு உருவாக்கப்பட்டு அதற்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து அவர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்குவதே இப்படையின் முதன்மை நோக்கமாகும். அதிலும் குறிப்பாகப் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த அதிரடிப்படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த சூழலில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா அடுத்தடுத்து இருமுறை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசாரை நியமித்து தமிழ் நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.