“சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து….” – யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது லியோ பட ‘Badass’ பாடல்!!

லியோ படத்தின் இரண்டாவது பாடல் ’Badass’, யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர்…

லியோ படத்தின் இரண்டாவது பாடல் ’Badass’, யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலி கான் என ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், அண்மையில் வெளியான போஸ்டர்களும், அதில் இடம்பெற்றிருந்த வாசகங்களும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. இதுமட்டுமல்லாமல், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாட்களை முன்னிட்டு வெளியான சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘லியோ’ படத்தின் முதல் பாடலான ’நா ரெடி’ வெளியானதும் கொண்டாடத் தொடங்கிய ரசிகர்களுக்கு, லியோ ஆடியோ லான்ஞ்ச் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நேற்று ’லியோ’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘Badass’-ஐ படக்குழு வெளியிட்டது.

இதையும் படியுங்கள் : 1000 கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 நிதியுதவி – ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

விஷ்ணு எடவன் வரிகளில், அனிருத்தின் குரலில் வெளியான ’Badass’ பாடல் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து பலரும் ரசித்து வரும் இப்பாடல், யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.