ஒத்த ஆளா புடி… கார் வாங்கிட்டு போ.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழாவில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு கார், பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அவனியாபுரத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஜல்லிகட்டு தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழாவில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு கார், பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அவனியாபுரத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஜல்லிகட்டு தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் சீறிப்பாயும் காளைகளை பிடித்தனர்.

இந்நிலையில் மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் ஆனந்தன் என்பவருக்கு மாடுபிடிக்கும்போது தீவிர காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார், பைக், குக்கர், பிரோ, ஹோம் தியேட்டர், மிக்ஸி, தங்க காசு ஆகியவை வழங்கப்பட உள்ளன.

மேலும் முதல் சுற்றில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டது. மேலும் தற்போது 2 வது சுற்று நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.