நடிகர் சிம்பு சமீபத்தில் இந்தி திரைப்படத்திற்கு பாடல் பாடி வைரலான நிலையில், இந்தி படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடித்து வெளியான மாநாடு மற்றும் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் ரசிர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி நடைபோட்டு வருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, இந்தி திரைப்படத்தில் சிம்பு அறிமுகமாகியுள்ளார். சத்ராம் இயக்கும் ‘டபுள் எக்ஸ் எல்’ என்ற படத்தில் தாலி…தாலி என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அடுத்ததாக இந்தி திரைப்படம் ஒன்று சிம்புக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
-இரா.நம்பிராஜன்








