‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்த சிம்பு… புகைப்படம் வைரல்!

தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் படப்பிடிப்பில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார். நாயகன் ரிலீஸாகி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.  கமலின் 234-வது படமான இதன் டைட்டில்…

தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் படப்பிடிப்பில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார்.

நாயகன் ரிலீஸாகி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.  கமலின் 234-வது படமான இதன் டைட்டில் தக் லைஃப் என டீசருடன் கடந்தாண்டு அப்டேட் வெளியானது.  அதனுடன் தக் லைஃப் படத்தில் த்ரிஷா,  ஜெயம் ரவி, துல்கர் சல்மான்,  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி,  ஜோஜூ ஜார்ஜ்,  கெளதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதையும் படக்குழு கன்ஃபார்ம் செய்தது.  அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் முன் தொடங்கிய தக் லைஃப் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தேர்தலுக்காக சில வாரங்கள் தக் லைஃப் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்தார் கமல்ஹாசன்.  அதேநேரம் கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.  இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகாத நிலையில்,  துல்கர் சல்மானுக்குப் பதிலாக சிம்பு கமிட்டகியுள்ளதாக சொல்லப்பட்டது.  இதனால் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் பற்றி ரசிகர்கள் ரொம்பவே குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில்,  தேர்தலுக்குப் பின்னர் டெல்லியில் நடக்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டார்.  அவருடன் சிம்பு,  த்ரிஷா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.  அதாவது டெல்லியில் நடைபெறும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமலுடன்,  சிம்புவும் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.  முக்கியமாக இந்த போட்டோவில் கமல்ஹாசன் சத்யா பட லுக்கில் இருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேபோல்,  கமல்,  சிம்பு ஆகியோருடன் அபிராமி,  நாசர் ஆகியோரும் தக் லைஃப் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர் . டெல்லியை தொடர்ந்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.  இந்தப் படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவிக்கு பதிலாக,  அசோக் செல்வன் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.  அதேநேரம் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் சிம்புவின் ப்ரோமோ வீடியோ இன்றோ அல்லது இந்த வார இறுதிக்குள்ளாகவோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.