வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் டிவிட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது :
என்ன படம் பண்ணாலும் ஒரு சிறிய பயம் இருக்கும். ஒரு மாணவன் போல உள்ளது முதல் பட நடிகன் போல தற்போது உள்ளது. எப்படி மக்கள் இந்த படத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று உள்ளது. என்னுடைய ரசிகர்கள் இந்த படத்தை என்ஜாய் பண்ணும் அதே நேரத்தில் என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன்.
ஜெயமோகன் இந்த கதையைச் சொன்ன பிறகு ஒரு புது பையன் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றார். நான் ஏன் எப்போதும் ஒரு பெரிய நடிகர் என நினைக்க வேண்டும். அதனால் இந்த படத்தை நடிக்க முடிவு செய்தேன். தமிழ்ப் படம் என்பது தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை. உலகம் முழுவதும் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. மக்கள் ஒரு படத்தைப் பார்க்கும் போது இந்த பையன் இதில் நல்லா வேலை செய்து இருக்கிறான் என்பதை உணர்ந்தாள் போதும். படத்தின் நேரம் என்பது தற்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. அந்த படத்திற்குத் தேவையான நேரத்தைத் தான் நாம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். கௌதம் இடம் பேசி படத்தின் நீளம் எவ்வளவு குறைக்க முடிந்ததோ அதைக் குறைத்துத் தான் இந்த படத்தைக் கொடுத்துள்ளோம்.
ரஹ்மான் அவர்களுக்கு என்மேல் தனி அன்பு உள்ளது. அதனால் பாடல்கள் மேலும் நல்லா இருக்கிறது. சிறிய வயதில் அவருடைய இசைக் கருவிகளை எல்லாம் உடைத்து விடுவேன் அதனால் அப்போது இருந்தே என்னை அவருக்கு நல்லா தெரியும். ரஹ்மான் இந்த படத்திற்கு நிறைய மெனக்கெட்டு சில விஷயங்கள் செய்துள்ளார். இந்த படத்தில் நிறைய புதிய விஷயங்கள் செய்துள்ளோம்.
மாநாடு படம் ரசிகர்கள் புரியவில்லை என்று சொல்லி இருந்தால் அது தோல்வி படமாக மாறி இருக்கும். சில விஷயங்களைச் செய்ய முயற்சி செய்யும் போது நாம் ஏன் பயந்து அந்த விஷயத்தைச் செய்யாமல் இருக்க வேண்டும். ரியலான ஒரு படத்திலும் மக்கள் கைதட்ட வாய்ப்பு உள்ளது. இன்னும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். படம் வெளியான பிறகு ரசிகர்கள் சந்திக்க முயற்சி செய்கிறேன். என பேசினார்.







