முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ராபின் உத்தப்பா ஓய்வு

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கும் ராபின் உத்தப்பா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவருக்கு வயது 36.  உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கேரளா மற்றும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ராபின் உத்தப்பா விளையாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக சமூக வலைதளமான டுவிட்டரில் ராபின் உத்தப்பாரசிகர்களுக்கு உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.  

அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் ஆகிறது. எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த பிசிசிஐயின் தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகா கிரிக்கெட் சங்கம், கேரளா கிரிக்கெட் சங்கம், செளராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு. அனைவருக்கும் நன்றி. எனது பெற்றோருக்கும், எனது சகோதரிக்கும் இந்தத் தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது பயணத்தில் நான் வெற்றி பெறுவதற்காக அவர்கள் பெரும் தியாகங்களை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராபின் உத்தப்பா ஓய்வு குறித்து அறிவித்ததை அடுத்து, அவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஒரு ஆட்டத்தின் வீடியோ பதிவை வெளியிட்டு ஐசிசி கெளரவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈபிள் டவர் முன்பு இந்திய அதிசயம்

G SaravanaKumar

கோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

EZHILARASAN D

நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்: மதுரை ஆதீனம்

Mohan Dass