தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




