முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

கோவையில் 27-ம் தேதி சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி – ரசிகர்கள் உற்சாகம்

பிரபல பாடகர் சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி வருகிற 27-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான விஐபி டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திரைப்பட பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் இசைக்கச்சேரி கோவை கொடிசீயா மைதானத்தில் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கச்சேரிக்கான விஐபி டிக்கெட் விற்பனை மற்றும் இசைக்கச்சேரிக்கான டீசர் வெளியீடு கோவையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வதாகவும், இந்த நிகழ்ச்சியில் பாடகர் சித் ஸ்ரீராமுடன், அவரின் இசை குழுவினரும்
பங்கேற்க உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் ‘பேன் பிட்’ இடம்பெறுவதாகவும் சுமார் 10,000 பேர் நிற்க கூடிய வகையில் அமைப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனால் ரசிகர்களுடன் சித் ஸ்ரீராம் உரையாடல் இருக்கும் என்றும் சித் ஸ்ரீராமின் மக்கள் தொடர்பு அலுவலர் சசி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்!

Web Editor

குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரை

Dinesh A

அதிமுக பொதுக்குழுவில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளது! – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Nandhakumar