முக்கியச் செய்திகள் தமிழகம்

“கூடுதல் அணு உலை அமைப்பதை கைவிட வேண்டும்”; திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தல்

கூடங்குளத்தில் 3,4 அணு உலை அமைக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. தமிழக மக்களின் நலன் கருதி இதை மாநில அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிராகவும், அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராகவும் அனைத்துக் கட்சித் தலைவர் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பை பூவுலகின் நண்பர்கள் குழு ஒருங்கிணைத்திருந்தது.

இதில் பேட்டியளித்த திருமாவளவன், “கூடங்குளத்தில் 3,4 அணு உலை அமைக்க தமிழக அரசு அணுமதியளித்துள்ளது. தமிழக மக்களின் நலன் கருதி இதை மாநில அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக கைவிட வேண்டும்.

ஆழ்நிலக் கருவூலம் எங்கே கட்டப்போகிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணு உலைகளில் நடைபெற்றிருக்கும் பிரச்சனைகள் பற்றி சார்பற்ற முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “வெளிநாடுகளில் இருந்து தரமற்ற அணு உலை தளவாடங்களை வாங்கி குவிக்காமல் தமிழர்களின் நலன்களை காக்க வேண்டும்.”என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

புகழ் பெற்ற FitBit நிறுவனத்தை வாங்கியது கூகுள்!

Saravana

கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்

Halley karthi

குறையும் கொரோனா: பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!

Halley karthi