சினிமா ஆசைக்காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குனர்! 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குனருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், மதுரவாயலை சேர்ந்த…

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குறும்பட இயக்குனருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், மதுரவாயலை சேர்ந்த சத்தியபிரகாஷ்(37) என்ற குறும்பட இயக்குனர், சென்னையை சேர்ந்த பள்ளி சிறுமியிடம் இஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகியுள்ளார்.

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, நடிப்பு பயிற்சி அளிப்பதாக கூறி, வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுசம்பந்தமாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், 2021ஆம் ஆண்டு சத்திய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ராஜலட்சுமி இன்று தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில் சத்திய பிரகாஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் அபராத தொகையில் 55 ஆயிரம் ரூபாயை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, உடல் மற்றும் மன ரிதியான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.