முக்கியச் செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டி – பதக்கங்களைக் குவித்த நடிகர் அஜித் அணி

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட அணி 4 தங்கம் மற்றும் 2 வெங்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் கடந்த 24ஆம் தேதி முதல் தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சப் யூத், யூத், ஜூனியர், சீனியர், மாஸ்டர் சீனியர், மாஸ்டர் என வயதின் அடிப்படையில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,300 நபர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். கடந்த 27 ஆம் தேதி அன்று பிரபல நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 சுடுதலத்திலும் பிஸ்டல் பிரிவுப் போட்டியில் கலந்துகொண்டு அன்று இரவே திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்ற162 நபர்களுக்கு ஓய்வு பெற்ற டிஜிபி தேவாரம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நேற்று வழங்கினார். இதில், நடிகர் அஜித்குமார் அணி, சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் என நான்கு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கம் என மொத்தமாக அவரது அணி 6 பதங்களை வென்றுள்ளனர். அதற்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அவரது அணியினரிடம் நேற்று வழங்கப்பட்டது என திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram