அமெரிக்கா: சூப்பர் பவுல் வெற்றி பேரணியில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, 20 பேர் காயம்!

அமெரிக்கா சூப்பர் பவுல் விளையாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடந்த பேரணியின் போது நடதப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 9 குழந்தைகள் உள்பட 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.    அமெரிக்காவில்…

அமெரிக்கா சூப்பர் பவுல் விளையாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடந்த பேரணியின் போது நடதப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 9 குழந்தைகள் உள்பட 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

 

அமெரிக்காவில் பொது இடங்களிலும் குடியிருப்புகளிலும் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  அந்த வகையில் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் மற்றொரு துயரமான சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்ஸாஸ் நகரில் உள்ளூர் சூப்பர் பவுல் போட்டியில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் பேரணி நடைபெற்றது.  இதில், லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேரணியில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சூப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 9 குழந்தைகள் உள்பட 20-க்கு மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.