அமெரிக்காவில் வணிக வளாகத்தில் பொதுமக்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், டாலஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிந்துள்ளனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதிலுக்கு துப்பாகிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெக்சாஸ் மாகாணத்தில் எந்தவித பயிற்சியும், உரிமமும் இன்றி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி உள்ளதால், துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கிச்சூடு தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/RepKeithSelf/status/1654973670433980419?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








