உடம்பை வலுப்படுத்த அதிக அளவு புரோட்டீன் பவுடர்; உயிரை பறித்த இளைஞரின் விபரீத செயல்…

கோவையில் உடம்பை வலிமைப்படுத்துவதற்காக அதிக அளவு புரோட்டீன் பவுடர் மற்றும் அசைவ உணவு உட்கொண்ட இளைஞர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினகர் என்ற இளைஞர்…

கோவையில் உடம்பை வலிமைப்படுத்துவதற்காக அதிக அளவு புரோட்டீன் பவுடர் மற்றும் அசைவ உணவு உட்கொண்ட இளைஞர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினகர் என்ற இளைஞர் அண்மைக்காலமாக உடற்பயிற்சிக் கூடம் சென்று, உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். உடலை வலிமைப்படுத்தி முறுக்கேற்றுவதற்காக அவர் அதிக அளவு புரோட்டீன் பவுடர் மற்றும் அசைவு உணவுகளை உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தினகருக்கு ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால் இருந்த நிலையில், திடீரென கடும் வயிற்றுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரின் திடீர் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் போலீசார் கூறும் நிலையில். மகனுக்கு திருமணம் முடிக்க வரன் பார்த்து வந்த தந்தை மற்றும் தினகரின் உறவினர்கள் சோகத்தில்
மூழ்கியுள்ளனர்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.