ரயிலில் ஃபுட்போர்டில் நின்றவர்களை சரமாரியாகத் தாக்கிய சக பயணிகள் – வெளியான அதிர்ச்சி வீடியோ!

  ரயில் நிலையத்தில் ஃபுட்போர்டில் நின்றவர்கள் சிலரை சரமாரியாகத் தாக்கிய சக பயணிகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளி ஒன்று, பயணிகள் தகராறில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. மகாராஷ்டிரா மாநிலம்…

 

ரயில் நிலையத்தில் ஃபுட்போர்டில் நின்றவர்கள் சிலரை சரமாரியாகத் தாக்கிய சக பயணிகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளி ஒன்று, பயணிகள் தகராறில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் திவா ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மக்கள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சண்டைக்கு வழிவகுத்தது.

https://twitter.com/Yourskamalk/status/1643141264836300800?s=20

சில பயணிகள் ரயிலின் ஃபுட்போர்டில் நின்றதால் மற்றவர்கள் ஏறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஸ்டேஷனில் இறங்க நினைத்தவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கைகலப்பில் ஈடுபட்டதுடன், ஃபுட்போர்டில் நின்றிருந்த இரு பயணிகள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோவை அதே ரயிலில் பயணித்த பயணி ஒருவர் எடுத்ததாகத் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.