ரயில் உணவறையில் உலாவும் எலிகள்.. பயணிகளுக்கான உணவை ருசிக்கும் அதிர்ச்சி வீடியோ..

மும்பை – கோவா இடையிலான விரைவு ரயிலில், பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் பெட்டியில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை எலிகள் உண்ணும் காட்சி வெளியாகியுள்ளது. ரயில்வே துறை சார்பில் நெடுந்தூரம் பயணம் செய்யும் விரைவு ரயில்களில்…

மும்பை – கோவா இடையிலான விரைவு ரயிலில், பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் பெட்டியில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை எலிகள் உண்ணும் காட்சி வெளியாகியுள்ளது.

ரயில்வே துறை சார்பில் நெடுந்தூரம் பயணம் செய்யும் விரைவு ரயில்களில் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் மூலம் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கோவாவின் மட்கான் பகுதியிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் (பேன்ட்ரி) சமையலறையில் எலிகள் ஓடுவதும், பாத்திரத்திலுள்ள உணவுகளை உண்பதும்போன்ற விடியோ வெளியாகியுள்ளது.

மும்பை – கோவா இடையிலான விரைவு ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியில், இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. சமையலறைப் பெட்டியில் வெளியே இருந்தவாறு அந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் எலிகள் உணவுகளை உண்டுவிட்டு, ஓடுவது போன்று பதிவாகியுள்ளது. வெட்டி வைத்த காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மேசையிலும் எலிகள் ஓடுகின்றன. இந்த விடியோவால், ரயில்வே உணவு தயாரிப்பின் சுகாதாரமின்மை குறித்து சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.