மதுரவாயல் அருகே வீட்டிற்குள் தாய், மகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மதுரவாயல் அருகே புளியம்பேடு பகுதியில் ஓட்டுநர் ஹரி அவரது மனைவி செல்வி, மகன் பூவரசன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கணவர் ஹரி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டிலிருந்த மனைவிசெல்வி, மகன் பூவசரன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளனர்.
அருகிலுள்ளவர்கள் அளித்த தகவலின்பேரில் இருவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயமுற்ற பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் செல்வியிடம் போலீசார் விசாரணை செய்ததில், மகனை தாம் அடித்துகொன்று விட்டதாக புலம்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







