லடாக் விபத்தில் 9 வீரர்கள் பலி; பிரதமர் மோடி இரங்கல்

லடாக் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம், கியாரி மலைப்பகுதியில் சென்று…

லடாக் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம், கியாரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர் காயமுற்ற இருவரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விபத்தில் பலியான ராணுவ வீரர்கள் தேசத்திற்கு ஆற்றிய செழுமையான சேவை எப்போதும் நினைவுகூறப்படும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.