தலையில் அடிபட்ட சிறுவனுக்கு தையலுக்கு பதில் பெவிகுயிக் தடவிய அதிர்ச்சி சம்பவம்; மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை

தெலங்கானாவில் தலையில் அடிபட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுயிக் தடவிய சம்பவத்தை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தெலுங்கானா மாநிலம், ஜோகுலம்பா கத்வேல் பகுதியைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா என்பவரின் மகன்…

தெலங்கானாவில் தலையில் அடிபட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுயிக் தடவிய சம்பவத்தை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஜோகுலம்பா கத்வேல் பகுதியைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா என்பவரின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு புருவத்தில் அடிப்பட்டுள்ளது. உடனடியாக மகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக்கை பூசி ஒட்டி அனுப்பி வைத்தனர். கண் புருவத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிக்காமல் அந்தப் பகுதி ஒட்டப்பட்டு இருப்பதால் சந்தேகம் அடைந்த வம்சி கிருஷ்ணா, மகனை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய புருவம் பெவிகுயிக் மூலம் ஒட்டி இருப்பதை கண்டறிந்தனர். மேலும், அறுவை சிகிச்சை மூலம் புருவத்தை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பெவிகுயிக்கை மருத்துவர்கள் அகற்றினர். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.