இலங்கைக்கு அரிசி கொண்டு செல்ல புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்த கப்பல்!

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு அரிசி கொண்டு செல்வதற்காக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்…

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு அரிசி கொண்டு செல்வதற்காக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து சிறிய ரக சரக்கு கப்பல்களை இயக்குவதற்காக துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு அரிசி, உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய தனியார் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 டன் சரக்குகளை கையாளக்கூடிய சிரிய ரக சரக்கு கப்பல் ஒன்று புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் புதுச்சேரியில் இருந்து 300 டன் அரிசியை இலங்கைக்கு எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.