’உண்மை தெரியாம அரைகுறையா கருத்து சொல்லாதீங்க’: ஷில்பா ஷெட்டி ஆவேசம்

ஒரு விஷயத்தின் உண்மை தெரியாமல் அரைகுறையாக அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். ஆபாசப் பட விவாகரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா உட்பட 11 பேர்…

ஒரு விஷயத்தின் உண்மை தெரியாமல் அரைகுறையாக அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

ஆபாசப் பட விவாகரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராஜ்குந்த்ராவுக்கு எதிராக சில நடிகைகள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். இதற்கிடையே, நடிகை ஷில்பா ஷெட்டி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக அனைத்து பக்கமிருந்தும் சவால்கள். என் மீது ஏராளமான வதந்தி களும், குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. மீடியாவிலும் நலம் விரும்பிகளிடம் (அப்படி இல்லாத) இருந்தும் ஆதாரமற்ற தாக்குதல்களும் கேலிகளும், கேள்விகளும் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எழுப்பப்பட்டன. அதுபற்றி நான் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கப் போவதில்லை. அதனால் என் மீது தவறாக பழி சுமத்த வேண்டாம். ஒரு நடிகையாக, என் கொள்கை என்பது, எந்த புகாரும் விளக்கமும் சொல்லக்கூடாது என்பதுதான். இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மும்பை போலீஸ் மற்றும் நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஒரு குடும்பமாக, எங்களால் முடிந்த அனைத்து சட்டப்பூர்வ வழிகளை முயன்று கொண் டிருக்கிறோம். அதுவரை உங்களை கேட்டுக்கொள்வது, எங்கள் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மை தெரியாமல் அரைகுறையாக அதுகுறித்து கருத்து தெரிவிக்காதீர்கள்.

https://twitter.com/TheShilpaShetty/status/1422092985672474626?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1422092985672474626%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fcinema%2Fbollywood%2F700228-shipa-shetty-statement.html

நான் சட்டத்தை மதிக்கும் குடிமகள், கடந்த 29 வருடமாக நான் கடினமாக உழைத்து வருபவள். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நேரத்தில் என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஊடக விசாரணைக்கு நாங்கள் தகுதியற்றவர்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும். சத்யமேவ ஜெயதே!’ என்று கூறியுள்ளார்.

இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.