பிரபல பாடகி திடீர் மரணம்: திரையுலகம் இரங்கல்

பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின் பம்பாய், குரு, கடல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு…

பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். மணிரத்னத்தின் பம்பாய், குரு, கடல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் நடித்த மின்சாரக் கனவு, அஜித், மம்மூட்டி நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

இவருடைய தாயார் கல்யாணி மேனன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகு மான் ஆகியோர் பல படங்களில் பின்னணி பாடியுள்ளார். சுஜாதா என்ற படத்தில், ’நீ வருவாய் என’, ’முத்து’ படத்தில் ’குலுவாளிலே முத்து வந்தல்லோ’, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், ’ஓ மணப்பெண்ணே’, விஜய்சேதுபதியின் ‘96’ படத்தில் காதலே காதலே உட்பட தமிழ், மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியுள்ளார்.

சென்னையில் வசித்து வந்த அவர், உடல் சரியில்லாததால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் காலமானார். மறைந்த கல்யாணி மேனனுக்கு ராஜீவ் மேனன் தவிர, கருணாகரன் மேனன் என்ற மகனும் உள்ளார்.

மறைந்த கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெற இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.