ருத்ர தாண்டவம் ஆடிய தவான்; நழுவிய சதம்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 2 ரன்களில் தவான் சதத்தை தவறவிட்டார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட்,…

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 2 ரன்களில் தவான் சதத்தை தவறவிட்டார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட், டி 20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையே இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 28 ரன்களில் வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய விராட் கோலி ஷிகர் தவானுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது.

கோலி தனது அரை சதத்தை கடந்த நிலையில், 60 பந்துகளுக்கு 56 ரன்கள் சேர்த்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ஷிகர் தவான் 106 பந்துகளுக்கு 98 ரன்களில் மோர்கனிடம் கேட்ச் கொடுத்து மயிரிழையில் தனது சதத்தை தவறவிட்டு வெளியேறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.