இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா, அவரை விவாகரத்து செய்துள் ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். அதிரடி ஆட்டக்காரரான இவர், இப்போது டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்காகத் தயாராகி வருகிறார். 35 வயதான இவருடைய மனைவி, ஆயிஷா முகர்ஜி.
கடந்த 8 வருடங்களுக்கு முன் இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தியா வை பூர்விகமாகக் கொண்ட ஆயிஷா (வயது 46), ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்தார். கிக்பாக்ஸிங் வீராங்கனை.
ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இவர், பின்னர் விவா கரத்து செய்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து ஷிகர் தவானை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், ஷிகர் தவானை பிரிந்துவிட்டதாக ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அதில் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்யும் வரை, அந்த வார்த்தையை அசுத்தமானதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றும் விவாகரத்து பற்றி நீண்ட அறிக்கை ஒன்றையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஷிகர் தவான் ஏதும் தெரிவிக்கவில்லை.








