”செந்தமிழ் கவிஞன் நான்” – வெளியானது ’அடியே’ படத்தின் ட்ரைலர்!

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “அடியே” படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள்…

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “அடியே” படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் அடியே என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல, திட்டம் இரண்டு ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். இந்த படத்தில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய், 96 பட பிரபலம் கௌரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்தை மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. எப்போதுமே ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருப்பது வழக்கமே. அதேபோல இந்த படத்திற்கும் அவரது ரசிகர்களிடமும், திரைப்பட பிரியர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் போது இதற்கு முன் வந்த தமிழ் படங்களை கலாய்ப்பது போல் பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.