திரைப்பட இயக்குனர் சித்திக் உயிரிழந்தார்! மாரடைப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம்!!

திரைப்பட இயக்குனர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரின் உடல்…

திரைப்பட இயக்குனர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு எதிர்பாராதவிதமாக நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சித்திக் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 69. இயக்குனர் சித்திக் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த பிரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

விஜயகாந்த் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற எங்கள் அண்ணா படத்தை இயக்கியதும் அவர் தான். இந்த படங்களை கொண்டாடிய ரசிகர்கள் சித்திக்கின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.