தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கும், ஒரு சவரன் ரூ.1240 குறைந்து ரூ.1,04,320-க்கும் விற்பனையானது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.310 குறைந்து ஒரு கிராம் ரூ.12,730-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.2480 குறைந்து ரூ.1,01,840-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.3720 குறைந்துள்ளது.
வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.200 க்கும், ஒரு கிலோவுக்கு ரு.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு நெருக்கமாக வந்திருப்பது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




