முக்கியச் செய்திகள் இந்தியா

ஷூவை பரிசளித்து தெலுங்கானா முதலமைச்சருக்கு சவால் விட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா!

தெலங்கானா முதலமைச்சருக்கு ஒரு ஜோடி ஷூவை பரிசாக அளித்து, என்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொள்ள தயாரா என ஒய்.எஸ். சர்மிளா ரெட்டி சவால் விட்டு உள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர் தெலங்கானா முதலமைச்சருக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசேகர் ராவின் இல்லம் முன் போராட்டம் நடத்த சென்ற போது போலீசார் அவரது காரை கிரேன் மூலம் தூக்கி சென்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் தனது மகளை பார்க்க புறப்பட்ட ஷர்மிளாவின் தயார் ஒய்.எஸ்.விஜயம்மாவும் தெலங்கானா போலீசாரால் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டார். இதற்கு என்னை பார்த்து முதலமைச்சர் பயந்து விட்டார் என ஷர்மிளா கூறினார். எனது பாதயாத்திரை நடக்க கூடாது என்று சந்திரசேகர ராவ் இதனை செய்து வருகிறார். போலீசாரை அவர் பயன்படுத்துகிறார் என ஷர்மிளா கூறினார்.

இதன்பின், தனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஷர்மிளா ஈடுபட்டார். தொடர்ந்து 3-வது நாளாக நடந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அவர் மயக்கமடைந்தார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், நிறுத்தப்பட்ட தனது பாதயாத்திரை நரசம்பேட்டையில் இருந்து இன்று மீண்டும் தொடங்கும் என ஷர்மிளா கூறினார். இந்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சியை பலப்படுத்துவதற்காக பாதயாத்திரையை அவர் தொடங்கியுள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, தெலங்கானா முதலமைச்சருக்கு நான் இன்று சவால் விடுக்கிறேன். அவர் என்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டு நடக்கட்டும்.

இதற்காக அவருக்கு ஒரு ஜோடி ஷூ பரிசாக தருகிறோம். அவர் கூறுவது போன்று, இது மாநிலத்தின் பொற்காலம் என்றால், மக்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்றால், அவர் கூறுவது போல், என்னுடைய மக்கள் வறுமையில் சிக்கி இருக்கவில்லை என்றால், அவரிடம் மன்னிப்பு கேட்டு அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடுகிறேன்.

ஆனால், அது உண்மை இல்லை என்றால், கே.சி.ஆர். பதவி விலக வேண்டும். மக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும். அவர் வாக்குறுதி அளித்தது போன்று தலித் ஒருவரை முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி

Arivazhagan Chinnasamy

சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த்

Gayathri Venkatesan

வைரலாகும் அதர்வாவின் ‘ட்ரிகர்’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்!

EZHILARASAN D