முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விருது

#ShareChatAward : நியூஸ் 7 தமிழுக்கு 2022-ம் ஆண்டுக்கான ஷேர்சாட் ஸ்டார் பார்ட்னர் விருது

நியூஸ் 7 தமிழ் ஷேர்சாட் தளத்திற்கு 2022ஆம் ஆண்டுக்கான ஷேர்சாட் ஸ்டார் பார்ட்னர் விருது  வழங்கப்பட்டுள்ளது.

நியூஸ் 7 தமிழ்-ன் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒன்றாக நியூஸ் 7 தமிழ் சேர்சாட் தளமும் இயங்கி வருகிறது. இந்த தளத்தை, இன்றைய தேதியில், 3 லட்சத்து 24 ஆயிரம்  பேருக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அளவில் மக்கள் அதிகமாக பின்தொடரும் செய்தி நிறுவனங்களில் நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நியூஸ் 7 தமிழ் நிறுவனமும், சேர்சேட் நிறுவனமும் இணைந்து வருடம் முழுவதும் உலகெங்கும் நடைபெறும் நிகழ்வுகளையும், மக்களுக்குத் தேவையான செய்திகளையும், மத்திய மாநில அரசுகளின் முக்கியத் திட்டங்களையும், உடனுக்குடன் வழங்கி வருகிறது. இதில் நியூஸ் 7 தமிழ் சேர்சாட் தளம், மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் குறுஞ்செய்தியாகவும், அதைப் பற்றிய விரிவான தகவலுடன் காணொளி காட்சியாகவும் வழங்கி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அவ்வாறு வழங்கப்படும் அனைத்து செய்திகளும் பெரும்பாலான மக்களை சென்றடைவதே இதன் சிறப்பு.

 

 

அதேப் போன்று ஒவ்வொரு வாரமும் நியூஸ் 7 தமிழ் சேர்சேட் தளத்தில் நேரலையானது நடைப்பெற்று வருகிறது. இந்த நேரலையில் சமூக அக்கறையுள்ள தலைப்புகளிலும், அவ்வப்போது நிகழும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

அதே போன்று புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், விளையாட்டுகள், என மக்களுக்கு பயன்படும், தகவல்களையும், பொழுதுபோக்கு சம்பத்தப்பட்ட தலைப்புகளிலும் வியாழக்கிழமை தோறும் விவாதமானது நடைபெற்று வருகிறது.

 

இந்த விவாதங்களில், பிரபல மருத்துவர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், என அந்தந்த துறைகளைச் சார்ந்த வல்லுநர்களை வைத்து விவாதமானது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு விவாதங்களையும் இறுதி வரையிலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அந்த விவாதங்களைப் பார்த்து வருகின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு முக்கியத் தகவல்களை வழங்கி வரும் நியூஸ் 7 தமிழ்  சேர்சேட் தளத்திற்கு 2022ம் ஆண்டுக்கான சேர்சாட் Star Partner விருதானது வழங்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தோடு ZEE தமிழ் நியூஸ்  மற்றும் தினகரன் டெய்லி நியூஸ் நிறுவனங்களும் இந்த விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

– பரசுராமன்.ப 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Web Editor

மு.க. ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்!

Gayathri Venkatesan

மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்!

Jeba Arul Robinson