இந்தியன் 2 படத்திற்காக புதிய VFX தொழில்நுட்பத்தை ஷங்கர் கையாண்டுள்ளார் என தெரிகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கி வரும் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசன் தான். பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் பிராஜெக்ட் கே என்கிற படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தின் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படூகோன், அமிதாப் பச்சன் முதலியவர்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
அண்மையில் இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உறுதிப்படுத்தப்பட்டன. தற்போது கமல்ஹாசன் இந்தப் படத்தின் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்பது இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சுமார் 25 கோடி ரூபாய் அவர் சம்பளமாக பெற்றிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்திய சினிமாவில் வில்லன் காதாபாத்திரத்திற்காக ஒரு நடிகர் பெறும் அதிகபட்சம் சம்பளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Scanning the advanced technology at Lola VFX LA ✨#Indian 2 pic.twitter.com/816QYA7sCN
— Shankar Shanmugham (@shankarshanmugh) July 23, 2023
இந்நிலையில், இந்தியன் 2 அப்டேட் குறித்து இயக்குனர் ஷங்கர் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு, இந்தியன் 2 படத்திற்காக புதிய VFX தொழில்நுட்பத்தை ஷங்கர் கையாண்டுள்ளார் என தெரிகிறது. இதுவரை தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே பார்த்திராத VFX காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








