முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை – சர்ச் பாதிரியார் செய்த செயல்

சென்னை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச் பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 31 வயதுமிக்க பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது 13 வயது மகளுக்கு பாதிரியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தொல்லை இருந்து வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

புகாரின் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் கைப்பேசியை வாங்கி சோதனை செய்தபோது, வாட்ஸ் அப்பில் பல ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்கள் இருந்தன. பின்னர் இதனை அனுப்பி வைத்த பெரம்பூர் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்த சேகர் கிருபாகரன் (வயது 38) என்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வில்லிவாக்கம் பெரியார் நகர் பகுதியில் உள்ள சர்ச்சில் புகார் அளித்த பெண்ணின் கணவர் வேலை பார்த்தபோது அங்கு பாதிரியாராக சேகர் கிருபாகரன் (வயது 38). என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கிருபாகரனின் மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண்ணும் அவரது 13 வயது மகளும் கிருபாகரனின் வீட்டிற்கு வேலைக்கு சேர்ந்துள்ளளனர். நாளடைவில், சிறுமியின் மீது கிருபாகரனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு புது ஆடை வாங்கி கொடுத்து நல்லவர் போல் நடித்துள்ளார்.

 

பின்னர் அவர் கும்முடிபூண்டியில் உள்ள சர்ச்க்கு மாறுதல் ஆகி சென்றதால், சிறுமியை பார்க்கமுடியாமல் போனது. இதனால் புது திட்டம் தீட்டி தன் முதல் மனைவி இறந்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளார்.இதனால் அவரை பார்த்து கொள்வதற்கு நீயும் உன் மகளும் கும்மிடிப்பூண்டி வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியும், அவரது தாயாரும் கும்டிப்பூண்டியில் கிருபாகரன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி கொண்ட கிருபாகரன் சிறுமியை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியே கூறினால் தந்தையை வேலையை விட்டு தூக்கிவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் சிறுமியும், அவரது தாயும் சென்னைக்கு வந்துவிட்டனர்.

 

இதனிடையே, சிறுமியின் கைப்பேசியில் வந்த ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கிருபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் நீச்சல் போட்டி: இந்திய வீரர்கள் தோல்வி

Vandhana

வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?

Halley Karthik

பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது- உயர்நீதிமன்றம்

G SaravanaKumar