முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ் – எடப்பாடி வாழ்க என பலர் கோஷம்

அதிமுக பொதுக்குழுவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். வருகையின் போது எடப்பாடி வாழ்க என அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என இருவருக்கும் ஒரே மேடையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து விவாதிக்கப்படும்.” என கூறினார். மேலும், “நீதிமன்றம் வழிகாட்டுதல் படி பொதுக்குழு நடக்கும். அனைவரின் கருத்துக்களை கேட்கதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி 4.30 மணி நேரம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து இது குறித்து விவாதிக்கப்படும்.” என்று கூறினார்.

தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்ததாவது, “எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். எதிர்காலத்தில் மிக விரைவில் தொண்டர் விருப்பப்படி ஒற்றை தலைமை உருவாகும். ஒன்றரை கோடி தொடர்களின் இயக்கம் வெற்றி பாதையில் செல்ல எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நல்லபடியாக சுமூகமாக பொதுக்குழு நடைபெறும்” என்று கூறினார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்துள்ளார். ஓபிஎஸ் வருகையின்போது “ஐயா எடப்பாடியார் வாழ்க, ஒற்றைத் தலைமை வேண்டும்” என எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 75 பேருடன் செயற்குழு உறுப்பினர் என மொத்தம் 2,665 பேர் இந்த கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அடுத்த நாவலுக்காக இந்தியா வருகிறார் சல்மான் ருஷ்டி

Ezhilarasan

ஐபிஎல்: ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே.. மீண்டும் நடக்குமா ஜட்டு மேஜிக்?

Halley Karthik

சிஎஸ்கேவில் ரெய்னாவை எடுக்காமல் போனது ஏன்?; காசி விஸ்வநாத் பதில்

Saravana Kumar