“எங்கள் நெஞ்சில் குடியிருக்கும்….” – வீடியோ வெளியிட்டு விஜய்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த Seven Screen Studio!

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு,  விஜய் நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.  விஜயின் நடிப்பில்…

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு,  விஜய் நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

விஜயின் நடிப்பில் ‘வெற்றி’ என்ற படம் கடந்த 1984-ம் ஆண்டில் வெளியானது. 1992-ம் ஆண்டு தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்.  இதனையடுத்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, யூத், ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட காதல் படங்களில் நடித்த விஜய் தற்போது கத்தி, மெர்சல், மாஸ்டர், லியோ உள்ளிட்ட பல ஆக்ஷன் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  

இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே அவர் உருவாக்கியுள்ளார்.  லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.  இதில் நடிகர்கள் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரசாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனிடையே நாளை நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு,  விஜய் நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.