விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.
பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் இதுவரை 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு (2021) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 24வது கிராண்ட் ஸ்லாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது இடத்தை (runnerup) பிடித்திருந்தார். 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக போட்டி நடத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த மாத இறுதியில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார். ஆல் இங்கிலாந்து கிளப் செவ்வாயன்று (ஜூன் 14) ட்விட்டர் மூலம் வில்லியம்ஸுக்கு ஒற்றையர்களுக்கான வைல்ட் கார்டு நுழைவு வழங்கப்பட்டது.
https://twitter.com/rolandgarros/status/1536705375994527749
வில்லியம்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பு ஆல் இங்கிலாந்து கிளப்பில் தனது முதல் சுற்று ஆட்டத்தின் முதல் செட்டின் போது காயமடைந்ததிலிருந்து எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த மாத தொடக்கத்தில் புல்-கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டியால் வெளியிடப்பட்ட பெண்கள் ஒற்றையர் நுழைவு பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து விம்பிள்டன் போட்டிக்கான வைல்ட் கார்ட் நுழைவு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் செரீனா வில்லியம்ஸ் உட்பட 6 டென்னிஸ் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “SW மற்றும் SW19. இது ஒரு தேதி. 2022. அங்கே சந்திப்போம்” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் குறிப்பிட்டிருந்த “SW” என்பது அவரது முதலெழுத்துகள், மேலும் “SW19” என்பது விம்பிள்டனுக்கான அஞ்சல் குறியீடாகும்.
இதன் மூலம் அவர் இந்த மாதம் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வார் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







