மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நோயாளிகள் உட்பட 10 பேர் தீயில் கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.







