நடிகர் கார்த்தியுடன் நடிக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை..!

ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஸ்வாதி, வெள்ளித் திரையில் நடிகர் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை ஸ்வாதி. இவர்…

ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை ஸ்வாதி, வெள்ளித் திரையில் நடிகர் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை ஸ்வாதி. இவர் தற்போது நடிகர் கார்த்தியுடன்  புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக வந்த தகவல்களால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது தொடர்பாக நடிகை ஸ்வாதிக்கு  ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்துகளை  தெரிவித்து வருகின்றனர்.

 சின்னத்திரை தொடர்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தற்போது வெள்ளித்திரையில் நடிக்க உள்ளார். சினிமாவில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்வாதி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:தீபத்திருவிழாவை ஒட்டி அண்ணாமலையாருக்கு, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மலர் மாலைகள்!

 2017-ல் பியூடிஃபுல் மனசுஹாலு என்ற கன்னட படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமரோட்டு செக்போஸ்ட், காட்டு கதே உள்ளிட்ட கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.