கல்லூரி மாணவிகளின் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்து விரைவில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்நிலையில் உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் பேராசிரியைகள்,
மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும், பாலியல் புகார்கள்
உள்ளிட்ட புகார்களை விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும்
என்றும், அதில் தாமதம் கூடாது என்றும், தனி கமிட்டியின் விவரங்களை யுஜிசி-யிடம்
தெரிவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு
யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கல்வி
நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என்று யுஜிசி-க்கு புகார் வந்ததன் காரணமாக
மீண்டும் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







