தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…!

முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். இதனால் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதையடுத்து செங்கோட்டையனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனிடையே செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன் அவர் ஆதரவாளர்களுடன் சென்றார். அவர்களை புஸ் ஆனந்தன் வரவேற்றார். இதையடுத்து செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனுக்கு ஈரோடு,கோவை,நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.