செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீர் மழை காரணமாக இடித்தாக்கியதில் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 8 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த நெல்வாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது செம்மறி ஆடுகளை வயல்வெளி பகுதியில் மேய்க்க அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே அப்பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்து வந்த நிலையில். திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது.
இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 8 செம்மறி ஆடுகள் இடி தாக்கியதில் சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.இதற்கிடையே ஆடுகளை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி இருந்த செல்லம்மாளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
—-கோ. சிவசங்கரன்







