முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்: செல்லூர் ராஜூ

ஸ்மார்ட் திட்ட பணிகளில் தவறு செய்திருந்தால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்படி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளையொட்டி. மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள அதிமுக அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்மார்ட் திட்டபணிகள் குறித்து நிதியமைச் சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பணிகளில் தவறு செய்திருந் தால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் படியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் தெரிவித்தார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரையில் சரியான திட்டமிடல் இல்லாமல் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 11.36 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர்

Ezhilarasan

ஓட்டல் பில் கட்டவில்லை: பிரபல நடிகர் மகன் சிறைபிடிப்பு

Halley karthi

வேதா நிலையம் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Niruban Chakkaaravarthi