அமெரிக்காவில் முகேஷ் அம்பானி, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருடன எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்தளித்தார். இதில் ஆனந்த் மஹிந்திரா, முகேஷ் அம்பானி விருந்தா கபூர் உள்ளிட்ட 380 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆனந்த் மஹிந்திரா மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் வெள்ளை மாளிகையில் நடந்த இந்தியா- அமெரிக்க ஹைடெக் ஹேண்ட்ஷேக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் சிஇஓ டிம் குக்கும் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆனந்த் மஹிந்திரா, விருந்தா கபூர், முகேஷ் அம்பானி ஆகியோர் அமெரிக்க வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது விருந்துக்கு அழைத்து செல்லும் வாகனத்தை அவர்கள் தவறவிட்டனர்- அவர்கள் வாகனத்திற்கு காத்திருந்த நேரத்தில் சுனிதா வில்லியம்ஸைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.இதனைத்தொடர்ந்து அவர்கள் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது உபேரை அழைக்கலாமா என்றும் இலையென்றால் விண்கலம் தயார் செய்ய முடியுமா என அவர்கள் சுனிதா வில்லியம்சிடம் கேட்டுள்ளனர். இந்த செல்பியை வாஷிங்டன் தருணம் என்ற தலைப்பில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.






