உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அதிமுக தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆலோசனைக்கூட்டம் பின் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியக் கட்சி நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இந்நிலையில், நண்பகலில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வருகை தந்தனர். மேலும், பா.வளர்மதி, ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோரும் கட்சி நிர்வாகிகளும் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.







