முக்கியச் செய்திகள் இந்தியா

இஸ்லாமியரென்பதால் ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? – சீமான் கண்டனம்

ஷாருக் கானின் மகன் ஆரியன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். கைதானவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர், சிறையில் இருந்து வெளியேற ஜாமின் மனு அளித்தார். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் அளித்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்யன் கானுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரைக் குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குறியது. ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடிகள் வரை பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “ஆர்யன் கானையைப் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்து நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசுக்கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கையென்ன? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. தவிர்க்க இயலா பல்வேறு ஐயங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை. மேலும், சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிளந்து பிரிந்து, மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது. பாஜக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன் என அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா உயிரிழப்புகள்; மத்திய அரசு எந்தவித பொறுப்பும் ஏற்கவில்லை: ராகுல்காந்தி!

Ezhilarasan

புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறை

Gayathri Venkatesan

கரூர் இளம் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல் காந்தி!

Jayapriya