சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும்: சீமான்

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர் என்ற ஒற்றைக் காரணத் துக்காக இலங்கை…

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர் என்ற ஒற்றைக் காரணத் துக்காக இலங்கை தமிழர்களை சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, மனித உரிமை மீறலை அரசு அரங்கேற்றி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 10 நாட்களாகப் பட்டினிப் போராட்டம் செய்து வரும் இலங்கை தமிழர்கள், தற் கொலைக்கு முயன்று வருவது மனவலியை தருவதாகவும் அவர் வேதனை தெரிவித் துள்ளார்.

சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக் கூடங்களையும் உடன டியாக மூடி, ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை அவர் கேட்டுக் கொண்டுள் ளார்.

மேலும், பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஈழத்தமிழர்களின் உயிரைக்காத்து, உடல்நலம் தேற்ற, தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டு மென என்றும் அரசுக்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.