முறையான பாதுகாப்பின்றி செயல்பட்டு வந்த நீச்சல் குளத்தினால் 6 வயது சிறுவன் உயிரிந்தார். இதனை தொடர்ந்து நீச்சல் குளத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை போரூர் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி நந்தகுமார், தாரிகா.
இவர்களுக்கு சஸ்வின் வைபவ் (வயது 6) மற்றும் இரண்டு வயதில் ஒரு ஆண்
குழந்தை உள்ளது. இவர்கள், தனது குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரி நீலமங்கலத்திற்கு கோடை விடுமுறைக்காக சென்றிருந்தார். அப்பொழுது, குழந்தைகள் ஆசைபட்டதால் அருகில் உள்ள ‘எஸ்.என்.எல்’ ஸ்போர்ட்ஸ் அகாடமி நீச்சல் குளத்திற்கு ஜூன் 7 ம் தேதி குளிக்க சென்றுள்ளனர்.
அப்பொழுது, ஆறு வயது சஸ்வின் வைபவ் நீரில் மூழ்கினார். உடனடியாக சிறுவனை
மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிறுவன் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மணிமங்கலம் காவல்துறையினர்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ‘எஸ்.என்.எல்’ ஸ்போர்ட்ஸ் அகாடமி நீச்சல்குளம் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் குன்றத்தூர் தாசில்தார் நாராயணன் மற்றும் கிராம அலுவலர் வீரராகவன் தலைமையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கபட்டது.
கு. பாலமுருகன்







